ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை விரைந்து மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை விரைந்து மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

முதலமைச்சர் முக ஸ்டாலின்

முதலமைச்சர் முக ஸ்டாலின்

இலங்கையின் பிடியில் தமிழக மீனவர்களின் 98 படகுகள் இருப்பதாகவும், இது ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 7 பேர், நேற்று முன்தினம் சிறைபிடிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கையின் பிடியில் தமிழக மீனவர்களின் 98 படகுகள் இருப்பதாகவும், இது ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமையில் தலையிடுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குகிறது... 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

  எனவே, ஏற்கனவே தான் தெரிவித்த ஆலோசனையின்படி, பாக் வளைகுடா பகுதியில் தொடர் அச்சுறுத்தலை இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: CM MK Stalin, External Minister jaishankar