Home /News /tamil-nadu /

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பெருமழையால் பாதிக்கப்பட்ட சேதங்களை மத்திய குழு ஆய்வு செய்ததையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார்.

    வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் விரைந்து நிதி வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பாண்டு பெய்த வரலாறு காணாத கனமழை சூழலில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பெருமழையால் பாதிக்கப்பட்ட சேதங்களை மத்திய குழு ஆய்வு செய்ததையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார்.

    மாநிலத்தின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510 கோடியே 83 லட்ச ரூபாயும், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய 4719 கோடியே 62 லட்ச ரூபாயையும் வழங்கக் கோரி, ஏற்கனவே 3 விரிவான அறிக்கைகளை சமர்பித்துள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : ரேஷன் கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு அனுப்புவதில் சிக்கல்

    கொரோனாவால் அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளதாகவும், மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக பயன்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    எனவே, தமிழக அரசு கோரிய ஆறாயிரத்து 230 கோடியே 45 லட்ச ரூபாய் நிதியை வழங்கிட, உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: MK Stalin, PM Modi

    அடுத்த செய்தி