நூறு நாட்களில் 2000 மணி நேரம் மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றிவர் முதல்வர் ஸ்டாலின் - திமுக எம்.எல்.ஏ பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின்

பேரூராட்சி சிறிய ஊர்களில் 50 உழவர் சந்தையை கொண்டுவரப்படும் என பல சிறப்பு திட்டங்களை இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
நூறு நாட்களில் 400 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்து மீதமுள்ள 2000 மணி நேரங்களிலும் மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் பட்ஜெட் மீதான  விவாதத்தின் போது உரையாற்றிானர். அப்போது,  2006 ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது உள்நாட்டு உற்பத்தி 8.48% இருந்தது, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்நாட்டு உற்பத்தி  5.46% குறைந்தது. அதிமுக ஆட்சியில்  உள்நாட்டு உற்பத்தி 3% குறைந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த  நிதிநிலை அறிக்கையில் உள்நாட்டு உற்பத்தி மீது அதிகம் கவனம் செலுத்தியுள்ளது.

Also Read :  கருணாநிதி செய்தது தவறு என்றால் அதே தவறை மு.க.ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர் பாபு

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்த  பட்ஜெட்டில் 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த நமக்கு நாமே தற்போது மீண்டும் முதல்வர் அவர்கள் உயிர் கொடுத்துள்ளார். பேரூராட்சி சிறிய ஊர்களில் 50 உழவர் சந்தையை கொண்டுவரப்படும் என பல சிறப்பு திட்டங்களை இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நூறு நாட்களில் 400 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்து மீதமுள்ள 2000 மணி நேரங்களிலும் மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: