ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாய்மாமாவுக்கு பர்த்டே... முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!

தாய்மாமாவுக்கு பர்த்டே... முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!

முதலமைச்சர் ஸ்டாலின், தக்‌ஷணாமூர்த்தி

முதலமைச்சர் ஸ்டாலின், தக்‌ஷணாமூர்த்தி

“அவரது 100வது பிறந்தநாளான இன்று, அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல்நலனுடன் எங்களோடு மேலும் பல்லாண்டு பயணித்திட இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்”

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தாய் மாமா தட்சிணாமூர்த்தியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தாய் மாமாவும் கழகப் பற்றாளருமான தட்சிணாமூர்த்தியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு 100-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.” என கூறியிருந்தார்.

  மேலும், திருவாரூர் மாவட்டத்தில்தான் எப்போது சுற்றுப்பயணம் சென்றாலும், தன் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம் எனவும் குறிப்பிட்டார். அவரும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து தன்னை நலம் விசாரிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

  வாழ்நாளில் நூறாண்டுகளைக் கண்டுள்ள அவரது நினைவாற்றல் இன்றும் தன்னை வியக்க வைப்பதாக குறிப்பிட்ட அவர், நடப்பு விவரங்களை விரல் நுனியில் வைத்து பேசுவார் என தெரிவித்தார்.

  மேலும், “அவரது 100வது பிறந்தநாளான இன்று, அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல்நலனுடன் எங்களோடு மேலும் பல்லாண்டு பயணித்திட இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin