ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இயேசுவின் போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

இயேசுவின் போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் திராவிட மாடல் அரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் சுட்டிகட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனித பண்புகளின் விழாவாக, கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் திராவிட மாடல் அரசு, கிறிஸ்தவ மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை உயர்த்துவதிலும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது என்றும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்காது..? முழு விவரம் இதோ!

தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்றும், “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்றும், “அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்.

திராவிட மாடல் அரசும் கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறித்துவ உதவி சங்கம் கூடுதலாகத் துவங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Christmas, CM MK Stalin