Home /News /tamil-nadu /

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. இபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த முதல்வர் ஸ்டாலினின் ட்விட்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. இபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த முதல்வர் ஸ்டாலினின் ட்விட்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறிவரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    தமிழக முன்னாள் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாலையில் முடிவு வந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து,  சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நலம் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "#COVID19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு.@OfficeOfOPS
    அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.



    அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். எனினும் தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என ஓபிஎஸ் கூறிவந்தார். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, CM MK Stalin, Corona, OPS

    அடுத்த செய்தி