மக்களின் வீடுகளை தேடி வரும் மருந்து, மாத்திரைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கவுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்  நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    குறிப்பாக தமிழகத்தில்  20 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு, சர்க்கரை நோய், சிறுநீரக புற்றுநோய், காச நோய், சிறுநீரக சிகிச்சை, முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர்களால் ஆராம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு நேரடியாக சென்று மருந்துகளை பெறுவது சில நேரங்களில் முடியாத காரியமாக உள்ளது.

    மேலும் படிக்க: நெல்லை அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற சொப்பு சாமான்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு!


    எனவே, இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம் வருகின்ற 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் துவங்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள் - நாஞ்சில் சம்பத் வாழ்த்து!


    இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
    Published by:Murugesh M
    First published: