ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

MK Stalin: சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

    சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதுகுவலி பரிசோதனை மேற்கொண்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  நேற்றிரவு 8 மணிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் உள்ள மையத்தில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

    இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு முதலமைச்சர் வந்ததால் அதிக எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதலமைச்சருடன் அவரது மனைவி, மகள் , மருமகன்,ஆகியோரும் வந்திருந்தனர்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin