ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

முதலைமைச்சர் ஸ்டாலின்

முதலைமைச்சர் ஸ்டாலின்

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின்ன அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 ஆறுபேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கயைில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன்.

    பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு நளினி, ரவிசந்திரன், ராபார்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிலிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    திமுகவை பொறுத்தவரை எதிர்கட்சியாக இருக்கும்போதும் ஆட்சியில் இருக்கும்போது இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான். அதன் பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடிரயரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம்.

    மாநில அரசின் அசை்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம்.

    Also Read : ராஜீவ் கொலை வழக்கு.. விடுதலை தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது -நளினி

    இந்நிலையில் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்டட வெற்றியாக அமைந்தது.

    அடுத்தபடியாக நளினி, ரவிசந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளன் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின்ன அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது,

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமன பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.

    Published by:Vijay R
    First published:

    Tags: CM MK Stalin, Rajiv Gandhi Murder case