Home /News /tamil-nadu /

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Booster Dose: முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மற்றும் முககவசம் மட்டுமே தடுப்பு ஆயுதமாக பார்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முன் களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 4 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, அனைத்து தடுப்பூசி மையங்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    Also read... தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று பரவல் 10 மடங்காக அதிகரிப்பு

    Also read... சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசியர் காமகோடி நியமனம்!

    இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டதாகவும், அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் எனவும், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.



    ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி முதல் தவணையும், ஏப்ரல் மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Corona Vaccine, MK Stalin

    அடுத்த செய்தி