ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம்.. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம்.. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெரியார் ஒரு சிந்தனை. அவருடைய சிந்தனைகள் காலத்தால் அழியாதவையாக உள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பெரியார் மறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். அவரது 49வது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் இன்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை சிம்சன் சந்திப்பில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  சிம்சன் பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க; எம்.ஜி.ஆர். நினைவு தினம்.. மெரினாவில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தந்தை பெரியாரின் 49ஆவது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம், நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், பெரியார் ஒரு சிந்தனை. அவருடைய சிந்தனைகள் காலத்தால் அழியாதவையாக உள்ளன என ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: DMK, MK Stalin, Periyar