ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திராவிடா.. விழி! எழு! நட! - நீதிக்கட்சி தொடங்கிய நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ச்சிகர ட்வீட்..

திராவிடா.. விழி! எழு! நட! - நீதிக்கட்சி தொடங்கிய நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ச்சிகர ட்வீட்..

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

“இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்” - மு.க.ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும் விழித்திட்ட தமிழனை வீழ்த்திட முடியாது என தென்னிந்திய நல சங்கம் (நீதிகட்சி) தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

  நீதிகட்சி தொடங்கப்பட்ட இந்நாள் சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள் என குறிப்பிட்ட முதலமைச்சர், ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்த எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி இது என குறிப்பிட்டார். இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம் எனவும் குறிப்பிட்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Dravidam