Home /News /tamil-nadu /

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

 முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

Morning Breakfast Scheme: முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான இன்று முதல் ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கிவைக்கிறார்.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி  110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும்  செயல்படுத்தப்பட உள்ளது’ என்று அறிவித்தார்.

    இதன்படி முதற்கட்டமாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான இன்று முதல் ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்படுகிறது. மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கிவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் இணைந்து உணவு அருந்துகிறார்.

    மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த  ரூ.33.56 கோடி  நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

    இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக, சென்னையில் 36 பள்ளிகளும் திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில் 20, கடலூரில் 15, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21, வேலூரில் 48, தூத்துக்குடியில் 8, மதுரையில் 26, சேலத்தில் 54, திண்டுக்கலில் 14, திருநெல்வேலியில் 22, ஈரோட்டில் 26, கன்னியாகுமரியில் 19, கோயம்புத்தூரில் 62 பள்ளிகளும்  என மாநகராட்சிகளில் 381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Government school

    அடுத்த செய்தி