ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாப் இசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் தமிழில் இருக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்

பாப் இசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் தமிழில் இருக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்

, 96வது மார்கழி இசை திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

, 96வது மார்கழி இசை திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழர்களின் இசை மரபு செழுமையானது என்றும், தன்னை விட தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இசை ஞானம் அதிகம் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசை மன்றங்களில் தமிழ் இசை தவறாது ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாப் இசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் தமிழில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சென்னையில் புகழ்பெற்ற சபாக்களில் ஒன்றான மியூசிக் அகாடமியில், 96வது மார்கழி இசை திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கலைகளை வளர்க்கும் பண்பாட்டு அமைப்பாக மியூசிக் அகாடமி திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு.. ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

தமிழர்களின் இசை மரபு செழுமையானது என்றும், தன்னை விட தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இசை ஞானம் அதிகம் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். எந்த இசை மன்றமாக இருந்தாலும்,எந்த வகை இசையாக இருந்தாலும் தமிழ் மொழிக்கு கலைஞர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

First published:

Tags: CM MK Stalin, Music, Tamil language