Home /News /tamil-nadu /

ரூ.300 கோடி செலவிலான திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் - அமைச்சர் சேகர் பாபு

ரூ.300 கோடி செலவிலான திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

இந்த பணிகளுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India
    திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி செலவில் செய்யப்படவுள்ள பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இன்று (01.09.2022) தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்குவிழாவில் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயில் சுற்றுச்சுவர், திருமண மண்டபம், விருந்து மண்டபம் ஆகியவை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பக்தர்கள் வைத்துள்ளார் எனவும் அவை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பணிகளை முடித்து தருவோம் எனவும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர்  சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்கள். அப்பணிகள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே தனது கையால் விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிவித்தார். இந்த பணிகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிக்க: அடேங்கப்பா.. ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்.. பக்தர்கள் நெகிழ்ச்சி

    இந்த பணிகளுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளனர் என தெரிவித்தார். பணிகள் தொடங்கப்படும் நாளிலேயே எவ்வளவு காலத்திற்குள் பணிகள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பார், அதற்குள் பணிகளை முடிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார். வெகு விரைவில் பக்தர்கள் தங்கும் விடுதிகளிலே உள்ள அறைகள் அனைத்தும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Minister Sekar Babu, Murugan temple, Tiruchendur

    அடுத்த செய்தி