Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் - மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் - மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரவு நேர ஊரடங்கு, நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை.

    ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார்..

    கொரோனா மற்றும் புதிய ஓமைக்ரான் வேரியண்ட் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

    கடந்த வாரம் S வகை ஜீன் சோதனைக்காக 57 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன, அதில் ஒருவருக்கு ஏற்கனவே ஓமைக்ரான் உறுதியான நிலையில், இன்று மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் 54 பேருக்கும், டெல்லியில் 57 பேருக்கும் ஓமைக்ரான் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் - 26, மதுரை - 4, திருவண்ணாமலை - 2, சேலத்தில் ஒருவர் என தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது.

    Also read:  ஒமைக்ரான்: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாநிலங்கள்

    இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஓமைக்ரான் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து வரும் நிலையில், கூடுதலாக கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அறிகுறி உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தொற்று பரவ அதிகமாக வாய்ப்பு உள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு விதிக்க ஏற்கனவே மத்திய அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாகவும், வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிக அளவிலான கூட்டம் கூடாத வகையில் கொண்டாடப்படுவதற்கு அறிவுறுத்தல்,  நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது.

    Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் உறுதி....! ₹1000 அல்லது ₹2000 வழங்க வாய்ப்பு

    பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்கு அதிகளவில் கூடும் வாய்ப்பு உள்ளதால் அதிகளவிலான கூட்டங்களை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் சார்ந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற மக்கள் கூடும் விதமான நிகழ்வுகளுக்கு தடை / கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, M.K.Stalin, Omicron

    அடுத்த செய்தி