ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எனது ஆட்சியில் உயர்கல்வித்துறை பொற்காலமாக திகழும்... உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

எனது ஆட்சியில் உயர்கல்வித்துறை பொற்காலமாக திகழும்... உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வித்துறையின் நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,பட்டம் பெறுவதன் மூலம் கல்வி நின்று விடாது; இறுதி மூச்சு உள்ள வரை தொடர வேண்டும்.பல கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், மேதைகளை சென்னை பல்கலை. உருவாகியுள்ளது. அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்கவே "நான் முதல்வன்" திட்டம் என்றார்.

மேலும் வேலைவாய்ப்புக்கு தகுதியான இளைஞர்களை உருவாக்குவதே அரசின் இலக்கு என்று கூறினார். பெண் கல்வியை ஊக்குவிக்க உயர்கல்வி உறுதி திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளது எனவும், மாணவர்களின் அடுத்தடுத்த உயர்வுக்கு பட்டம் என்பது சிறந்த அடித்தளம் என்றும் பேசினார். தமது தலைமையிலான ஆட்சியில்,  உயர்கல்வித்துறை பொற்காலமாக திகழ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read : ஓ சாமியோ மின் வெட்டா? அணில் பிடிக்கணுமா - மின்வாரிய ஊழியரின் திருமணத்தில் பிளக்ஸ் போர்டு வைத்த 2கே கிட்ஸ்

நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளங்கலை படிப்பிற்கு நுழைவுத்தேர்வு வரக்கூடாது என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், இந்த நுழைவுத்தேர்வுகள், தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்க காரணமாக உள்ளதென்றும் பேசினார்.

First published:

Tags: MK Stalin, RN Ravi