திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாறு குறித்து, "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகத்தை கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
Also Read : நளினிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி மனுத்தாக்கல்
இந்நிலைியல் உங்களில் ஒருவன் நூலை படித்துவிட்டு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த பாராட்டியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.