ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சட்டபேரவை நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசியதுடன், அமைச்சரையும் உரிய பதில் அளிக்குமாறு கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு துறைவாரியாக அவரது கோரிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பேசி வந்தார்.

அப்போது, பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை யில்லா வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி எழுந்து, அதிமுக ஆட்சியில் எப்போதெல்லாம் வேஷ்டி சேலைகள் வழங்கப்படவில்லை என்கிற பட்டியலைத் தொடர்ந்து படித்தார்.

அப்போது முதல்வர் மு.கஸ்டாலின் குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் விலையில்லா வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்று கேட்கிறார். அதற்கு என்ன பதில், அதை மட்டும் சொல்லுங்கள் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் விலையில்லா வேஷ்டி வேலை வழங்கப்படும் என கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, Edappadi Palaniswami, TN Assembly