Home /News /tamil-nadu /

சிறார் குற்றங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சிறார் குற்றங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சிற்பி திட்டம் தொடக்கம்

சிற்பி திட்டம் தொடக்கம்

சிற்பி திட்டம், இளமைக்காலம் முதலே மாணவர்களை, சமூக பொறுப்புமிக்கவர்களாக உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    சிறார் குற்ற செயல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறார் குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும், 'சிற்பி' திட்டத்தை, சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் சென்னையில் 100 பள்ளியில், தலா 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ஒவ்வொரு பள்ளிக்கும் 2 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு சமூக ஒழுக்கங்களை கற்றுத்தரப்படும். நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    ALSO READ | சென்னை காலநிலை மாற்றம் - எதிர்கொள்வது எப்படி? பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்..

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், காவல் துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்றார். மேலும், சிற்பி திட்டம், இளமைக்காலம் முதலே மாணவர்களை, சமூக பொறுப்புமிக்கவர்களாக உருவாக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் இத்திட்டத்தை செயல்படுத்தும்போது மனித உரிமை மீறல்களோ, புகார்களோ இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, CM MK Stalin, Tamilnadu govt

    அடுத்த செய்தி