ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைய கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைய கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடாத வகையில் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

  மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

  இதையும் படிங்க: ஆவின் மாதந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க அதிரடி உத்தரவு 

  மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதவும், தொழிற்துறை சார்பில் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  உலக வங்கி நிதி உதவியோடு ஆயிரத்து 763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அடுத்த 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: CM MK Stalin