சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை தான் சுயநலகாரன்தான் என்றும், பேசுவதை விட செயலில்திறமையை காட்ட வேண்டும் என்று எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.
கொளத்தூர் டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெறுகிற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறி மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு அதிகம் பேச கூடாது. பேசுவதை விட செயலில் திறமையை காட்ட வேண்டும் என்று உணர்வோடுதான் எனது கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் பதவியை மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாக கருதுகிறேன்.இந்த விழாவை பார்க்கும்போது எனக்கு பாராட்டு விழா நடப்பது போல் உள்ளது. தற்போது 5மாதத்தில் பாராட்டு விழா போல உள்ளது. இதே போல 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் போது பாராட்டும் விதத்தில் இருக்க வேண்டும்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, கொளத்தூர் தொகுதியில் வென்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டபோது அதனை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்குதான் எடுத்து சென்றேன். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நான் சுயநலக்காரன் தான். நான் வாரத்திற்கு 3முறை கொளத்தூர் தொகுதிக்கு வருகிறேன் ஆனால் பார்த்த முகம் தானே என்று இல்லாமல் என்னை எப்போதும் இன் முகத்துடன் வரவேற்கிற சுகமே தனி தான்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் உறுதி....! ₹1000 அல்லது ₹2000 வழங்க வாய்ப்பு
தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். ஆனால் நீங்கள் தட்டாமலேயே நாங்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். 5 வருடம் செய்ய வேண்டியதை 5மாதங்களில் நீங்கள் செய்து வருகிறீர்கள் என பத்திரிகைகள் பாராட்டி வருகிறது.சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக எனது ஆட்சி இருக்கும் என்று பேசினார்.
மேலும் படிங்க: சண்முகநாதன் என்பது பெயர் அல்ல, கலைஞரின் நீங்கா நிழல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, Kolathur Constituency, MK Stalin