ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

பள்ளிகளும் கல்லூரிகளும் பெற்றோரும் சேர்ந்து இளைய சக்தியை பாதுகாக்க வளர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனதாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்று நடக்காமல் தடுக்கும் கடமை சமூகத்திற்கு உள்ளது என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 2021 முதல் நடத்தப்படும் இந்த முகாமில், ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், அண்மையில் ஐடிசி ஹோட்டலில் நியூஸ்18 தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தினீர்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டதாகவும், தானும், அனைத்து அமைச்சர்களும் மருத்துவராக மாறியதால் இது சாத்தியமானது என பதில் அளித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தற்காலிக வாபஸ்… போராட்ட குழுவினர் அறிவிப்பு!

கல்லூரி மாணவி சத்யா சென்னை மவுண்ட் ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர், சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை, இந்த சம்பவம் உணர்த்துவதாக வேதனை தெரிவித்தார். பள்ளிகளும் கல்லூரிகளும் பெற்றோரும் சேர்ந்து இளைய சக்தியை பாதுகாக்க, வளர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

First published:

Tags: CM MK Stalin, Tamilnadu government