முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உயிரிழப்புகளை தடுக்க சட்டம் இயற்றினால் ஆளுநர் தடுக்கிறார்... முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

உயிரிழப்புகளை தடுக்க சட்டம் இயற்றினால் ஆளுநர் தடுக்கிறார்... முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin | திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை நாடு முழுமைக்கும் கொண்டு செல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட உரிமை இல்லாத மாநிலத்திற்கு தான் ஆளுநர் உள்ளாரா என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பதாக கூறினார். உயிரழப்புகளை தடுக்க தாம் சட்டம் இயற்றினால், அதனை ஆளுநர் தடுப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை என்று கூறிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை நாடு முழுமைக்கும் கொண்டு செல்வோம் என்றார்.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi