போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

போதைப்பாருட்கள் விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் எச்சரித்தார்.

  • Share this:
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கஞ்சா விற்பனை செய்த 3,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். போதைப்பாருட்கள் விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் எச்சரித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் சட்டமன்ற பா.ம.க. உறுப்பினர் ஜி.கே. மணி, பள்ளி, கல்லூரிகள் அருகே மற்றும் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக தெரிவித்தார். மேலும், போதைப்பொருட்கள் உற்பத்தி, கடத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு பொறுப்பேற்று, இதுவரை போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, குட்கா விற்பனை செய்தவர்கள்மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,247 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 149.43 டன் குட்க பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குட்பாக விற்பனை செய்தது தொடர்பாக 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Also Read : போதைப்பொருள் வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது

அதேபோல், தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 ஆயிரத்து 437 பேர் கைது செய்யப்பட்டதில், 81 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்த முதலமைச்சர், 5,937 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள்மீது, கடும் தண்டன எடுக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை முழுவதும் தமிழகத்தில் தடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதிபட தெரிவித்தார்.

மீண்டும் பேரவையில் கேள்வி எழுப்பிய உறுப்பினர் ஜி.கே. மணி, போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறையினரை ஊக்குவிக்க இந்த அரசு தயங்காது என்றும், காவலர்களுக்கு அவர்களுக்குரிய வெகுமதி நிச்சயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: