வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த
பாமக,
காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர் . இதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், வன்னிய சமுதாயத்திற்கு 10.5 சதவீத ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் இந்த அரசு தீவிரமாக வாதாடியது. இது
அதிமுக கொண்டு வந்திருந்தாலும் கூட உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் தமிழ்நாடு அரசின் சார்பாக வாதாடினார்கள்.
கடந்த ஆட்சியில் காலையில் தேர்தல் அறிவிப்பு வருவதாக தகவல் வந்த நிலையில், மாலையில் அவசர அவசரமாக சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தனர். இந்த வழக்கை சுட்டி காட்டி உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை திருப்பி சுட்டிக்காட்டி அவையில் ஏட்டிக்கி போட்டி அரசியல் செய்ய விரும்பவில்லை ஏனென்றால் இது சமூக நீதி பிரச்னை.
இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2015ல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வரும் அரை மணி நேரத்துக்கு முன்பாக கொண்டு வந்து அவசர கதியில் அதிமுக அரசு நிறைவேற்றிய காரணத்தினால் தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காரணம்.
Must Read : தமிழகத்தில் ஒமைக்ரான் XE வகை கொரோனா பாதிப்பு? - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
இது மாநிலத்தின் சமூக நீதி பிரச்னை, சட்ட ஆலோசகர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வன்னியர் இட ஒதுக்கீட்டில் சமூக நீதி காக்கப்படும் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.