ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"நூற்றாண்டு கால போராட்டத்திற்கு பின்னடைவு" 10% இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

"நூற்றாண்டு கால போராட்டத்திற்கு பின்னடைவு" 10% இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு மத்திய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.

  இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

  எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

  இதையும் படிங்க | இன்று வெளியாகிறது 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை!

  மேலும், சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CM MK Stalin, MK Stalin, OBC Reservation, Reservation, Supreme court, Supreme court judgement