ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தும் முடிவை கைவிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தும் முடிவை கைவிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி

பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை நிறுத்தும் மத்திய அரசின் முடிவால் தமிழ்நாட்டில் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என பிரமதர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை..

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டத்தை நிறுத்தும் முடிவை கைவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிறுப்பதாவது, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர் எனக் கூறியிருப்பது ஏழைச் சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  குஷ்புவிற்கு கணவராக இருப்பதற்காகவே இயக்குநர் சுந்தர் சிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் - ஆளுநர் தமிழிசை கலகலப்பு

பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை நிறுத்தும் மத்திய அரசின் முடிவால் தமிழ்நாட்டில் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை கைவிடும் முடிவை நிறுத்தி மீண்டும் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Narendra Modi, Scholarship