ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக - பட்டமளிப்பு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக - பட்டமளிப்பு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM Mk Stalin | கல்வியை பொது பட்டியலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, பல்கலைக்கழகத்தில் 2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

  காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசியில் தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து காந்தி கிராம கிராமிய பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

   இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கான அறிவலாயமாக திகழும் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம். குஜராத்தில் பிறந்து ஒற்றுமையில் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வளம் வந்த காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் தமிழை விரும்பி கற்றவர். மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்திட்டவர்.

  திருக்குறளை படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழை கற்க வேண்டும் என்று சொன்னவர். இவை அனைத்திற்கு மேலாக உயர் ஆடை அணிந்து அரசியல் வாழ்கைக்கு நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்த தமிழ்மண். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும் அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்ந இந்த பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிரதமர் மோடியை தமிழக முதல்வர் என்ற முறையில் வரவேற்கிறேன்.

  Also Read : பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

  இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடு மாணவர்களும் இங்கு உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளை பயின்று வருகின்றனர் என்பதை அறியும் போதும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

  ' isDesktop="true" id="835027" youtubeid="Lb5YNLbmTAs" category="tamil-nadu">

  தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைகழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல், விளையாட்டு, கால்நடை, மீன்வளம், மருத்துவம், தமிழ்வளர்ச்சி, சட்டம் மற்றும் இசை ஆகிய துறையின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு உயர்கல்வியில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில அரசு பல்வேறு கல்வி திட்டங்களை கொண்டு வருகிறது.

  இந்த பெருமைமிகு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இசைஞானி எனும் பெருமைமிகு பட்டத்தை கலைஞர் வழங்கினார். மேலும் கல்வியை பொது பட்டியலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: CM MK Stalin, Dindigul, PM Modi