• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ஒன்ஸ்மோர் கேளுங்க சொல்றேன் - சிஎஸ்கே பாராட்டு மேடையில் ஸ்டாலின் கலகலப்பு

ஒன்ஸ்மோர் கேளுங்க சொல்றேன் - சிஎஸ்கே பாராட்டு மேடையில் ஸ்டாலின் கலகலப்பு

தோனி - ஸ்டாலின்

தோனி - ஸ்டாலின்

சிஎஸ்கே பாராட்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனியை புகழந்து கலகலப்பாக பேசி மேடையில் சிரிப்பலையை உருவாக்கினார்.

 • Last Updated :
 • Share this:
  ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சாம்பயின் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். என் தந்தை கலைஞர் எனது பேத்தி, பேரன் உட்பட எங்கள் குடும்பமே தோனியின் ரசிகர்கள். எனக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளது. மேயராக இருந்த போது காட்சி போட்டியில் ஆடி உள்ளேன், கிரிக்கெட் போட்டிகளை நடத்தி உள்ளேன். கார்கில் போரின் போது நடந்த சிறப்பு போட்டியின் போது எனக்கு கபில்தேவுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

  தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் தோனி. நாம் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தோனியும் தலைவர் கலைஞரை போல கூல் ஆனவர். நெருக்கடியின் போதெல்லாம் கூலாகவே இருப்பார்கள் இருவரும்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை மறக்கவே முடியாது.

  டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் அது தோனி தான் என்று உருவாக்கி உள்ளார். நான் ஆட்சி ஏற்ற பின் அனைவரும் சொல்வார்கள் தினமும் ஒரு சிக்ஸர் அடிக்கிறேன் என்று. அப்போது எல்லாம் நான் தோனியை நினைத்து கொள்வேன். சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை விட அவர் சிறந்த கேப்டனாக நான் பார்க்கிறார். ஒரு அணியை வழிநடத்துவது சவாலான ஒன்று . சீனியர் முதல் இளம் வீரர்களை ஒருங்கிணைத்து தோனி ஈட்டியிருக்கும் வெற்றி ஆளுமைக்கான சான்று.

  இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்தமுடியாது, இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும். அபார வெற்றியுடன் மீண்டு எழுந்திருக்கும் சென்னை அணியை வாழ்த்தி வணங்குகிறேன். நீங்கள் விளையாட்டை தொடருங்கள் நாங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம என்றார்.

  இறுதியாக, டியர் தோனி, நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு சென்னை அணியை வழிநடத்த வேண்டும் என்றார். ஒன்ஸ்மோர் கேளுங்க சொல்றேன் என்று மீண்டும் இதே கருத்தை வலியுறுத்தினார். ஸ்டாலின் கலகலப்பான பேச்சால் மேடையில் சிரிப்பலை எழுந்தது. மேலும் தன் உரையின் முழுவதும் மு.க.ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் தோனியை புகழ்ந்து தள்ளினார்.

  இந்ந நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உடன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதராத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலாநிதி வீரசாமி எம்.பி உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனி, முன்னாள் வீரர் கபில்தேவ், சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: