ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நான் தோனி ரசிகன் என தெரிந்து என்னை ஃபினிஷிங் ஆட வைத்துள்ளார் டி.ஆர்.பி ராஜா - ட்விட்டர் ஸ்பேஸில் முதலமைச்சர் பேச்சு!

நான் தோனி ரசிகன் என தெரிந்து என்னை ஃபினிஷிங் ஆட வைத்துள்ளார் டி.ஆர்.பி ராஜா - ட்விட்டர் ஸ்பேஸில் முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை படித்து வாந்தி எடுப்பவர்களுக்கு நாம் பதில் கூற முடியாது -முதலமைச்சர் ஸ்டாலின்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மதவாத சாதியவாத சக்திகள் தான் நமது எதிரிகள் என ட்விட்டர் ஸ்பேஸில் நடைபெற்ற திராவிட மாத நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

  திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற திராவிட மாத நிகழ்ச்சியில் ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

  ட்விட்டர் ஸ்பேஸில் முதல் முறையாக உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு தோனியை பிடிக்கும் என தெரிந்து தன்னை ஃபினிஷிங் ஆட வைத்துள்ளார் டி.ஆர்.பி ராஜா என கூறினார். திராவிட மாத நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய நிலையில் அவ்வாறு கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், “ஒரு காலத்தில் நமது கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல எழுத்துக்களாக, மேடைப் பேச்சுக்களாக, மேடை நாடகங்களாக, திரைப்படத்தின் வாயிலாக கொண்டு சென்றோம். இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதனை கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.

  ஐடி விங் உறுப்பினர்கள் நிர்வாகிகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். சமூக வலைதளங்களில் திமுகவின் வரலாறுகளையும் செயல்பாடுகளையும் தவறாக திரித்து கூறுபவர்களின் செயல்பாடுகளை நீங்கள் தடுக்க வேண்டும்.

  சமூக ஊடகங்களில் பொய்கள் அதிகம் பரப்பப்படுகிறது. உணர்ச்சி வசத்தில் பேசப்பட்ட வார்த்தைகளை, வைத்து விளையாடும் தப்பு கணக்குகளுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்.

  73% மக்கள் மொபைல் போனில் செய்தி பார்க்கிறார்கள். 3 முதல் 4 மணி நேரம் சராசரியாக மொபைல் பார்கிறார்கள் என புள்ளி விவரம் சொல்கிறது. எனவே அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

  நமது வளர்ச்சியை வட மாநிலங்களோடு ஒப்பிடுவது தவறு என்றாலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலங்கள் எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்றும் தமிழ்நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்றும் தற்போது எப்படி உள்ளது என்பதை பார்த்தாலே தெரியும்.

  திராவிடம் தமிழகத்தை தலைநிமிர வைத்தது. அனைவரும் படிக்க அருகருகே பள்ளிகளை உருவாக்கினோம். உயர்கல்வி அடைய கல்லூரி கல்வியை இலவசமாக்கினோம்.

  இதையும் வாசிக்க: அதிகவேகமாக வாகனம் ஓட்டிய வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது!

  பெண்களை ஆசிரியர்களாக உருவாக்கியது திராவிட இயக்கம். கல்வி சமூக நீதி பெண்ணுரிமை திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வருகிறோம்.

  நமது எதிரிகள் மதவாத சாதிய வாத சக்திகள். மதவாதிகள் சாதியவாதிகள் உங்களை எரிச்சல் ஊட்டுவார்கள், ஆபாசமாக பேசுவார்கள் உங்களை கோபமூட்டுவார்கள். பெண்கள் என்றால் ஆபாசமாக திட்டுவார்கள் பேசுவார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் அளிக்கக்கூடாது. நாமே புது பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை படித்து வாந்தி எடுப்பவர்களுக்கு நாம் பதில் கூற முடியாது” என பேசினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, DMK cadres, Twitter