முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கேலரி திறப்பு விழா: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தோனி ஆகியோர் பங்கேற்பு

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கேலரி திறப்பு விழா: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தோனி ஆகியோர் பங்கேற்பு

உதயநிதி, எம்.எஸ்.தோனி, முதலமைச்சர் ஸ்டாலின்

உதயநிதி, எம்.எஸ்.தோனி, முதலமைச்சர் ஸ்டாலின்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக 5,306 இருக்கைகள் கொண்ட புதிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் இணைந்து வரும் 17ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்பு மற்றும் புதிய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக கூடுதலாக 5,306 இருக்கைகள் கொண்ட புதிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் விழாவில் பங்கேற்கிறார். சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே 31,100 இருக்கைகள் உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கூடுதல் இருக்கைகள் பயன்படுத்தப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

First published:

Tags: Chepauk, CM MK Stalin, MS Dhoni, Udhayanidhi Stalin