தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட தேமுதிக, அமமுகவுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனாலும், ஒரு தொகுதியில் கூட தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. எனினும், தேமுதிகவுடன் திமுக நட்புறவை தொடர்ந்து வருகிறது. முதலமைச்சராக மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின், விஜயகாந்தை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். பின்னர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பி ஆ.ராசா, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் உள்ளிடோர் உடன் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க... MeKedatu | மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் விவகாரம்.. இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்..
உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் சூழலில் அதற்கான ஆயத்தப் பணிகளில் பல்வேறு கட்சிகளும் களம் இறங்கியுள்ளன. ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பின் போது, உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசித்திருக்கலாம் என கூறப்படுகிறது. திமுக - தேமுதிக இடையேயான அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMDK, DMK, Vijayakanth, Vijayakanth house