Home /News /tamil-nadu /

12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Kalluri Kanavu:நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்டந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், கடந்த திங்கட்கிழமை வெளியானது. இதனைத் தொடர்ந்து, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தமிழக அரசு ஏற்கனவே தொடங்கியுள்ள "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கிவைக்கிறார்.

    மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகள் தங்களுக்கு உயர்கல்விக்கு உள்ள வாய்ப்பு குறித்து பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என பிரிவு வாரியாக அறிய வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்தும், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    இதையும் படிங்க: வாவ் சொல்ல வைக்கும் தமிழக அரசு வெளியிட்ட புதிய ரேஷன் கடைகளின் கட்டிட வடிவமைப்பு
    இந்த நிகழ்ச்சிக்காக, உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் ஆகியவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொடக்க நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் முன்னிலையில் HCL நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்த 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளை தகுதியின் அடிப்படையில் ஹெச்.சி.எல்., நிறுவனம் தேர்வுசெய்து, பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், பயிற்சிக்கான செலவை அரசு ஏற்பதுடன், பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும் படிக்க:
    இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்யப்படும்... அமைச்சர் பொன்முடி


    இந்த விழாவில், சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக, வரும் 29, 30 அடுத்த மாதம் 1 மற்றும் 2-ம் தேதிகளில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, College Admission

    அடுத்த செய்தி