ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 518 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 518 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிறைவடைந்த 518 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிறைவடைந்துள்ள கொடிவேரி உள்ளிட்ட இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன. திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் சந்தையை மேம்படுத்தும் பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு உணர்வு பூங்காக்கள் உள்ளிட்டவற்றையும், மணலி பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பாலங்கள், விரிவான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அடர்வனக்காடுகள் உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Also Read : வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

இறுதியாக பல்வேறு அரசு துறைகளில் பணியின் போது உயிரிழந்த 126 பேரின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

First published:

Tags: MK Stalin