ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'குட்டி காவலர்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

'குட்டி காவலர்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

'குட்டி காவலர்' திட்டம்

'குட்டி காவலர்' திட்டம்

CM MK Stalin | சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'குட்டி காவலர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

  இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் 5 ஆயிரம் மாணவர்களும், பல்வேறு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  Also Read : ஆப்பரேஷன் மின்னல்.. கைதான 2309 ரவுடிகளை விடுவித்த மர்மம் என்ன? - ஈபிஎஸ் கேள்வி

  இந்நிகழ்ச்சி ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அதற்கான சான்றிதழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. முன்னதாக 3 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த கையேட்டினை முதலமைச்சர் வெளியிட்டார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: CM MK Stalin