மக்களை தேடி மருத்துவம் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைத்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி் உட்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு இரண்டு முறை வரை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். பல்வேறு காரணங்களால் இந்த நோயாளிகளில் பலர், முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால், ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.

  எனவே இந்த மாதிரியான நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் நோக்கில், மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி பகுதியில் இன்று தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில்திருநெல்வேலி கிருஷ்ணகிரி சேலம் மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை பரிசோதித்து தேவையான மருத்துவ உதவிகளை சுகாதாரப் பணியாளர்கள் வழங்குவார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர பகுதியான கக்கன் நகர் பகுதியில் இந்த திட்டம் தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரானா காலத்தில் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை சரிசெய்யவேண்டும் என நோக்கில் இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 45 வயதிற்க்கும் மேற்பட்டோரின் வீட்டிற்க்கு சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். 242 கோடி ரூபாய் முதற்கட்டமாக இந்த திட்டத்திற்க்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: