Home /News /tamil-nadu /

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி வேகமான ஆட்சி மட்டும் இல்ல, விவேகமான ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி வேகமான ஆட்சி மட்டும் இல்ல, விவேகமான ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவும் வெளியிட பட்டது அதில், தனது பரப்புரையின் போது, 7 திட்டங்கள் பற்றி அறிவித்து இருத்தாகவும், அதில் கல்வி, வேலை வாய்ப்பு, சுற்று சூழல், நீர்வளத்தை பெருக்குதல், உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தை சுட்டி காட்டி, அதனை மக்கள் மறந்திருந்தாலும், தான் மறக்கவில்லையென்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி வேகமான ஆட்சி மட்டும் இல்ல, விவேகமான ஆட்சி. துரிதமான ஆட்சி மட்டும் இல்ல, இது துல்லியமான ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அனைத்துத் துறைகளின் திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நில்லாமல், அவை செயல்படுத்தப்படும் நிலையையும், அது குறித்த தகவல்களையும் நாள்தோறும் அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அந்த வகையில் 38 மாவட்டங்கள், 42 அரசுத்துறைகள், 21 மாநகராட்சிகள், 310 தாலுகாக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 நகர்புற பஞ்சாயத்துகள், 17680 கிராம பஞ்சாயத்துகள் ஆகிய அனைத்து துறைகளையும் முதல்வர் கண்காணிக்கும் வகையில் மின்னனு தகவல் பலகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் துவக்கி வைத்துள்ளார்..

    திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டது அதில், தனது பரப்புரையின் போது, 7 திட்டங்கள் பற்றி அறிவித்து இருந்ததாகவும், அதில் கல்வி, வேலை வாய்ப்பு, சுற்று சூழல், நீர்வளத்தை பெருக்குதல், உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தை சுட்டி காட்டி, அதனை மக்கள் மறந்திருந்தாலும், தான் மறக்கவில்லையென்று கூறியுள்ளார்.

    Also read... உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டினால் வழக்கு பதிய வேண்டும் - நீதிமன்றம்!

    மேலும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ," வேகமான ஆட்சி மட்டும் இல்ல, விவேகமான ஆட்சி; துரிதமான ஆட்சி மட்டும் இல்ல, இது துல்லியமான ஆட்சி” என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

    Also read... கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை... : குனியமுத்தூர் போலீசார் விசாரணை

    தன் அலுவலக அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்கமுடியும். அறிவித்த வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், மேற்கொண்ட பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் கூடிய மின்னணு தகவல் பலகை முதலமைச்சர் அறையில் வைக்கப்படவுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dmk leader mk stalin

    அடுத்த செய்தி