• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோ பேக் vs வெல்கம் : ஸ்டாலினின் கோவை வருகையையொட்டி ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

கோ பேக் vs வெல்கம் : ஸ்டாலினின் கோவை வருகையையொட்டி ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

நாளை கொடியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து ட்விட்டரில் 2 ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன.

    கோவையில் ரூ.587.91 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய அரசு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

    நாளை கொடியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில் ஸ்டாலினின் கோவை பயணத்தை வரவேற்று #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ், திமுக அரசின் சாதனைகள் பதிவு செய்யப்படுவதை பார்க்கலாம்.

     







     

    இதேபோன்று, ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதன்கீழ், திமுக அரசை விமர்சித்து பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

     

     







    முன்னதாக சென்னையில் இருந்து கோவை வந்தடைந்த மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: