முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டின் பொற்காலத்திற்கான அடித்தளம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டின் பொற்காலத்திற்கான அடித்தளம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு துறைகளிலும் துறைசார்ந்த செயலாளர்கள், செயல்வீரர்களாக செயல்பட வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டின் பொற்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளை, ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது. இதில், போக்குவரத்து, கைத்தறி, பொதுப்பணி, உணவுத்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 14 துறைகளை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியான ஆய்வுகளால் தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும் எனக் கூறினார். தமிழ்நாட்டில் பல துறைகளில், பல திட்டங்கள் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு துறைகளிலும் துறைசார்ந்த செயலாளர்கள், செயல்வீரர்களாக செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

.

First published:

Tags: CM MK Stalin, Govt Scheme, Tamilnadu government