ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார்.

  தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலமைச்சருக்கு, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற ஸ்டாலின், ஆய்வு மேற்கொண்டார். ஆணையரின் அலுவலகத்தில் அமர்ந்த அவர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  தொடர்ந்து தஞ்சாவூருக்கு சென்ற முதலமைச்சர், அம்மாபேட்டை அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தில், பீமனோடை வடிகால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

  இதனிடையே, மக்கள் மனநிறைவுடன் செல்வதை உறுதிப்படுத்த அரசு அலுவலகங்களில் தனது ஆய்வுகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் மனநிறைவுடன் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு பணியாற்றவேண்டியது அரசு ஊழியர்களின் கடமை எனவும் தெரிவித்துள்ளார். எனவே தனது ஆய்வுகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: MK Stalin