கடந்த காலங்களில் மழை நீரால் அதிகம் பாதிக்கப்பட வேளச்சேரி பள்ளிக்கரணை உள்ளிட்ட 9 இடங்களில் நேரில் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.. மழைநீர் வடிகால் தூய்மைப் பணி திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..
அதன்படி 20ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 895.31 கி.மீ. நீளமுள்ள 4254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், 948 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால்களில் சிறு பழுதுகளை சரிபார்த்து பராமரித்தல் மற்றும் 6891 இடங்களில் உடைந்த நிலையில் உள்ள மனித நுழைவு வாயில் மூடிகளை மாற்றம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
முக ஸ்டாலின் நேரில் ஆய்வு
காந்தி மண்டபம் சாலையில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியையும், மத்திய கைலாஷ் முதல் இந்திரா நகர் மற்றும் திருவான்மியூர் வரை நடைபெறும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாருதல், தூய்மைப்படுத்துதல், சிறு கால்வாய்கள் அமைக்கும் பணி, மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளை பார்வையிடும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Also Read : உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
மாநகராட்சி சார்பில்வேளச்சேரி ஏரியில் நடைபெறும் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சிறு வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதன் தொடர்ச்சியாக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வேளச்சேரி வீராங்கள் ஓடையை தூர்வாரும் பணியையும் பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் பாலத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். இறுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கிறார்..
மேலும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் நேற்று முதலமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார். அனைத்து பகுதிகளிலும், மழை நீர் தங்குதடையின்றி வெளியேறும் வகையிலான பணிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram