Home /News /tamil-nadu /

முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை

மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை

MK Stalin: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்திருந்தார். அதேபோல், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் போய் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக, இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் பதிவிட்டிருந்தார்.



    முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  ‘தமிழக முதல்வர் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிக்க: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு.. அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுகோள்!!

    இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, CM MK Stalin, Corona, Seeman

    அடுத்த செய்தி