ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் அசத்தல் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் அசத்தல் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

வகுப்பறை ஒன்றுக்கு சென்ற முதலமைச்சர், வானவில் மன்றத்தின் செயல்பாடுகளை மாணவர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளிகளுக்கான வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து மன்றத்தின் செயல்பாடுகளை பார்த்து ரசித்தார்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றடைந்தார். திருவெறும்பூர் அருகே காட்டூர் பாப்பாக்குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற முதலமைச்சர், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், நடமாடும் அறிவியல் ஆய்வகங்களையும் துவக்கி வைத்தார்.

இதையடுத்து வகுப்பறை ஒன்றுக்கு சென்ற முதலமைச்சர், வானவில் மன்றத்தின் செயல்பாடுகளை மாணவர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக வானவில் மன்றம் செயல்படும்.
இத்திட்டத்தின்படி அறிவியலில் ஆர்வமுள்ள நபர்கள் பள்ளிக்கு வந்து, அறிவியல் செயல் முறை பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.
மேலும், ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளைச் செய்துகாட்டி மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவர்.
தமிழகம் முழுவதும் 13,120 பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பள்ளிக்கு ரூ. 1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
First published:

Tags: CM MK Stalin, Education