Home /News /tamil-nadu /

தேசிய கொடியை வழங்கி யாத்திரை தொடங்கி வைத்த ஸ்டாலின்... சல்யூட் அடித்து பெற்ற ராகுல் காந்தி

தேசிய கொடியை வழங்கி யாத்திரை தொடங்கி வைத்த ஸ்டாலின்... சல்யூட் அடித்து பெற்ற ராகுல் காந்தி

சல்யூட் அடித்து பெற்ற ராகுல் காந்தி

சல்யூட் அடித்து பெற்ற ராகுல் காந்தி

Rahul Gandhi's Bharat Jodo Yatra: இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். கதரால் ஆன தேசிய கொடியை, ராகுலிடம் கொடுத்து நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு "பாரத் ஜோடோ" என்ற யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இதற்கான சென்னை வந்த ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் அவரின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நினைவிட வளாகத்தில் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.

    பின்னர், சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கு, கடலுக்கு நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று பார்வையிட்டார். மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டார். அத்துடன், காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று அங்குள்ள அவரது சிலைக்கு, மரியாதை செலுத்தித்தினார். இதையடுத்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதையடுத்து, "இந்திய ஒற்றுமை பயணத்தின்" தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.

    காந்தி நினைவு மண்டபம் முன்பாக தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம், 600 மீட்டர் தொலைவில் உள்ள, கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல் மேற்கொண்ட பயணத்தின் மூலம் மத்தியில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    முதல் நாள் நடைபயணம் முடிவடைந்ததை அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடல்கள் இசைக்கப்பட்டு பாதயாத்திரை பொதுகூட்டம் தொடங்கியது. அத்துடன், நடை பயணத்துக்கான தமிழ் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.



    தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுபிய வாழ்த்து செய்தியை, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி மேடையில் வாசித்தார். அதில், இந்த யாத்திரையின் முடிவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெரும் எனவும் சோனியா குறிப்பிட்டிருந்தார்.

    முதல்வர் ஸ்டாலின்,  ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை கொடுத்த போது அதனை ராகுல் சல்யூட் அடித்து பெற்று கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: CM MK Stalin, Rahul gandhi

    அடுத்த செய்தி