கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் கொடியேற்றும் வாய்ப்பை, உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்.
75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தமிழக அரசால் மிகப்பெரிய நிணைவுத்தூண் உருவாக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத் தொகை 8 ,500 லிருந்து 9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
வஉசி யின் 150-வது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கி செல்லட்டும் இந்த வையம் என்பதை போன்ற பொற்காலத்தை உருவாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
கொரோனா நெருக்கடி காலத்தில் அரசின் முயற்சிகளுக்கு அடித்தளமாக இருந்த மருத்துவர், செவிலியர், முன்கள பணியாளர்கள், அரசு இயந்திர அலுவலகர்கள் அனைவரையும் பாராட்ட கடமைபட்டுள்ளேன்.
தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து 101வது நாள் இன்று. நிதிச்சுமையோடு, கொரோனா நெருக்கடியான கால சூழலில் பதவியேற்று பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கின்றோம்.
காந்தி குறித்த அரிய கலைப் பொருட்களை கொண்ட மதுரை காந்தி அருங்காட்சியகம் பொதுமக்களையும் இளைய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் 6 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.
சாதி, மதம், இனம் குறித்த பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்திய திருநாட்டை வழிநடத்த காந்திய சிந்தனைகள் எனும் கருத்தை இளைஞர் மனதில் ஆழப் பதிய வைக்க சூளுரைப்போம்", என்றார்.
அதன்பின்னர் பல்வேறு பிரிவுகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.