சொத்துவரியை மனமுவந்து உயர்த்தவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்த்தப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகவும் அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு உறுப்பினர், செல்வப்பெருந்தகை, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் வரிவிதிப்பு குறைவாக இருந்தாலும், சொத்துவரியை கொஞ்சம் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கொரோனா தொற்றால் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாமகவின் ஜி.கே.மணி வலியுறுத்தினார் சொத்து வரி உயர்வை சமச்சீரான முறையில் கொண்டு வர வேண்டும் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரேன் பேசினார்.
Also read... பெரியார் பல்கலையின் அருவருக்கத்தக்க அடக்குமுறை: அரசு தலையிட வேண்டும் - ராமதாஸ்
சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலியும், தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தியதன் மூலம் வீட்டு வாடகை உயர வாய்ப்பு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமச்சந்திரனும் குறிப்பிட்டனர்.
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக எம்எல்ஏ, சதன் திருமலை குமார், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோரும் வலியுறுத்தினர்.
சொத்து வரி 83 விழுக்காடு மக்களை பெரிதும் பாதிக்காது என்று சொத்துவரி மனமுவந்து உயர்த்தவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.