ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

MK Stalin : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

MK Stalin : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஏற்பட்ட உயிரிழப்புகளால் பல குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இவ்வாறு, பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ருபாகய் வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரண உதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிவாரண உதவிகள் தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளனர். இதன்படி தமிழக அரசு வழங்கும் 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும்.

குழந்தைகள் வளர்ந்து 18 வயதை அடையும் வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவடைந்தவுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வட்டியுடன் அந்த பணம் கிடைக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி கல்வி தொடர்பான அறிவிப்புகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

Must Read : நடிகை வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி... தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை

அதன்படி, பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் தயார் செய்து வருகின்றனர். படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More : ஒரே மாதத்தில் 1,589 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கான இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, உதவித் தொகையை வழங்கி முதலமைச்சர் குழந்தைகளுடன் நலம் விசாரித்து நம்பிக்கையூட்டினார். அப்போது, முதலாமைச்சருடன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

First published:

Tags: Corona death, Covid-19, MK Stalin