• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழக அரசின் பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்ன?

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழக அரசின் பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசு பொறுப்பேற்ற பின் அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் என அறிவிக்கப்பட்டது.

  • Share this:
    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், சட்டம் போன்ற தொழில் கல்வி படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    திமுக அரசு பொறுப்பேற்ற பின் அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இதில், பட்ஜெட் தாக்கல் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    Also Read : மக்களை தேடி மருத்துவம் - புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    அத்துடன், வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்டை நடப்பு கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக இருந்த காரணங்களை ஆய்வு செய்யவும், உரிய தீர்வுகளை, பரிந்துரைக்கவும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

    அந்த பரிந்துரைகளை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7 புள்ளி 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதை போன்றே அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பிற தொழில் படிப்புகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவை நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    Also Read : சட்டக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் தகவல்

    முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் கலைவாணர் அரங்கில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்படும். ஆகஸ்ட் 16ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வரும் 9-ம் தேதி தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்>. அந்த வகையில் 120 பக்கங்களை கொண்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் வருவாய் இழப்பிற்கான காரணம், கடன் விவரம், போக்குவரத்து, குடிநீர், மின்வாரிய துறைகளின் வரவு- செலவு குறித்த விவரங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: