ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட நல்லக்கண்ணுதான் எங்கள் வழிகாட்டி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட நல்லக்கண்ணுதான் எங்கள் வழிகாட்டி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நல்லக்கண்ணுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நல்லக்கண்ணுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சூழ்ந்து வந்து கொண்டு இருக்கும் சனாதன சக்திகளின் அடக்குமுறையை தவிர்க்க தோழர் நல்லக்கண்ணு ஆலோசனைகளை வழங்க வேண்டும் - வைகோ

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 98 வது பிறந்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களின் பிறந்தநாள் விழாவில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா உள்ளிடோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுவுடைமை இயக்கத்தின் சிற்பி தோழர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தகைசால் தமிழர் விருது தோழர் சங்கராய்யா, நல்லக்கண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அந்த விருது பெருமை பெற்றுள்ளது. பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட நாம் எடுத்துள்ள முயற்சிக்கு நல்லக்கண்ணு வழிகாட்டியாக திகழ்கிறார்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தியாகம் தன்னலமற்ற வீரம், இந்த நாள் மாவோ பிறந்தநாள் அதே நாளில் தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் நல்லக்கண்ணு பிறந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சரித்திரம் படைத்த கேடிகே தங்கமணியின் நினைவு தினமும் கூட.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் 13 ஆண்டுகள் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவரை வீதி வழியாக கூட்டி வந்த காரணத்தினால் ஜீயர்களால் கட்டி வைத்து அடிக்க வைக்கபட்டவர் நல்லக்கண்ணு. இத்தகைய தீரமிக்க செயல்களால் தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அளித்துள்ளது.

அந்த விருந்துக்கு அழைக்கப்பட்ட தொகையுடன் தனது கையில் இருந்த 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்த தியாகச்சுடர் தான் நல்லக்கண்ணு.

சூழ்ந்து வந்து கொண்டு இருக்கும் சனாதன சக்திகளின் அடக்குமுறையை தவிர்க்க தோழர் நல்லக்கண்ணு ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என பேசினார்.

மேலும் பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை வணக்கங்களையும் தெரிவித்தனர்.

First published:

Tags: CM MK Stalin, Nallakannu, Vaiko